. பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன?
கோவிலுக்குள் நுழைந்தவுடன் கூட்டமாகவோ, தனியாகவோ சென்றால், அங்கு உட்கார்ந்து மனம் சார்ந்த வழிபாட்டைச் செய்யவேண்டும். சிவன் கோவிலுக்குப் போனால், சிவனைப்பற்றி, அரைமணி நேரத்திற்கு குறையாமல், பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிறகு வழக்கமாக செய்யகூடிய வழிபாடுகளைச் செய்யுங்கள். இதன் மூலம் இறைவனின் அருளை நேரடியாக பெறுகிறீர்கள்.
2. ஊர்களில்
உடல் சார்ந்த வழிபாடுகளான, காவடி எடுத்தல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், மொளப்பாரி தூக்குதல் முதலிய உடல் சார்ந்த செயல்பாடுகளை மனம் சார்ந்த வழிபாடுகளாக மாற்றிவிடுங்கள். அதாவது, மேற்குறிப்பிட்ட சடங்குகளுக்கு முன்பு, நீங்கள் அன்று வணங்கும் இறைவனைப் பற்றிய பாடல்கள், பிரார்த்தனை என்று அரை மணி நேரத்திற்கு குறையாமல் மனம் சார்ந்த வழிபாடு (மசாவ) செய்துவிடுங்கள்.
3. அதற்கு பிறகு மேற்குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது நேரடியாக இறைவனை தொடர்பு கொள்கிறீர்கள் அவனது அருளை பெறுகிறீர்கள். கோவில் திருவிழாவின்போது காலை, மாலை இருவேளையும் மசாவ-செய்யலாம். ரேடியோ போடுவதை தவிர்த்து விடுங்கள் அதிக இரைச்சல் இறைவனுக்கு பிடிக்காது.
4. பாதயாத்திரை
செல்லும்போதும், இருமுடி சுமந்து செல்லும்போதும் ஒய்வு எடுக்கும் நேரங்களில் முருகனைப் பற்றியும், ஐயப்பனைப் பற்றியும் அரை மணி நேரத்திற்கு குறையாமல், பாடல்கள் பாடி, பிரார்த்தனை செய்யுங்கள். அந்த தெய்வங்களை மையமாக வைத்து பேசுபவர்கள் பேச மற்றவர்கள் கேட்கலாம்.
வாய்துற்நாற்றம் போக, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மயக்கம், கிறுகிறுப்பிலிருந்து பூரண குணம்பெற, ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.
0 Post a Comment:
Post a Comment