Friday, October 29, 2021

குளிப்பது எந்த தண்ணீரில்

 

    சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா?             
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,

‘சைனக்ஸ்’ உள்ளவர்களுக்கு தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகிய நோய்த் தொந்தரவுகள் ஏற்படும். அந்த மாதிரி தொந்தரவுகள் உள்ளவர்கள் கட்டாயம் சுடு நீரில்தான் குளிக்க வேண்டும்.

பச்சைத் தண்ணீரில் குளிக்கும்போது மேற்படி தொந்தரவுகள் இல்லாமலிருக்கும். ஆனால் கால் முட்டி வலிக்கும்.

சுடு நீர் எப்படி இருக்க வேண்டும்? நமது தோல்ப்பகுதியின் வெப்ப நிலை 34 டிகிரி செண்டிகிரேடு ஆகும். ஆகவே குளிக்கும் சுடு நீரும் 34 டிகிரி செண்டிகிரேடு இருப்பது நல்லது. அப்பொழுதுதான் தோல் விரிவடைவதோ, சுருங்குவதோ இருக்காது. அதாவது குளிக்கும் போது சூடாகவும் குளிர்ச்சியாகவும் உணரகூடாது.

ஒரு டிகிரி கூடி 35 டிகிரியில் வெது வெதுப்பாக சூடு பண்ணியும் குளிக்கலாம்.. அதற்கு மேல் சூடு இருக்கும்போது தோல் விரிவடையும். தொடர்ந்து மிகவும் சூடாக குளிக்கும்போது, தோல் தொடர்ந்து விரிவடைவதால், அது “தொழ, தொழ” என்று ஆகி விடும். 

            ஹீலர் அரோமணி

தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: