A 235-MLM--
Twin Medicine-9 Principles- Satisfaction in conjugal life இரட்டைமருத்துவம்(Twin Medicine)
Satisfaction in conjugal life
மிருகங்கள் பிறந்த உடனேயே நடக்கின்ற குட்டிகளையே ஈன்றெடுக்கின்றன. அவ்வளவு ஏன்! ஆதிகால குகை மனிதனும் பிறந்த உடனே நடக்கின்ற குழந்தைகளைத்தான் பெற்றெடுத்தான். நவீன கால மனிதன் மட்டும்தான் பிறந்து ஓராண்டு கழித்து நடக்கின்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கிறான். காரணம் என்ன? மிருகங்களும் குகை மனிதனும் உணவின் முழு ஆற்றலையும், இயற்கை விதிகளையும் மீறாமல், அதன் ஆற்றலையும் பெற்றார்கள்.
1. மனிதனின் நாகரீக வளர்ச்சியில், வயிற்றின் அளவறிந்து சாப்பிடும் அரோமணியின் தொழில்நுட்பத்தை மறந்து, சுவைக்கு அடிமையாகி, அளவுக்கதிகமாக சாப்பிட ஆரம்பித்தான்; உடல் பலவீனப்பட்டான்.
2. இயந்திரமான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு பொறுமையை இழந்து அவசரத்துக்கு ஆளானான். பொறுமையாக, சூடான உணவுப் பொருட்களை ஆறவைத்து (37 டிகிரி c) உண்ண மறந்தான். மிகவும் ஆறிய பழங்கஞ்சி, ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர், குளிர் பானங்கள் போன்ற குளிர்ச்சி தரும் உணவுப் பண்டங்களை உணவு வரிசையில் செர்த்தான். இதனால் உணவு மண்டல உறுப்புகள் விரிந்தும் சுருங்கியும் பலவீனப்பட்டதையும் அறியாமல் இருந்து விட்டான்.
3. இயற்கை உணவை சமைக்காமல் சாப்பிட்டு உடலுக்கு ஒவ்வாமையை (allergy) வரவழைத்தல்லாமல், சமைத்த உணவு தரும் அபரிதமான ஆற்றலை இழந்தான்.
4. தாகம் எடுக்காமல் அளவுக்கதிகமாக தண்ணீர் குடித்து நோய்களை வரவழைத்துக் கொண்டான்.
5. பசி எடுக்காமலே நொருக்குத்தீனியை உண்டு, வரக்கூடாத நோய்களையெல்லாம் வரவழைத்துக் கொண்டான்.
6. கழிவுப் பொருட்களை குறிப்பாக மலம் முழுவதையும் உடலை விட்டு அகற்றும் அவசியத்தை அறியாமல் இருந்து விட்டான். இதனாலும் ஆற்றலை இழந்து விட்டான்.
7. அறமற்ற வாழ்க்கை வாழ்ந்து, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தன்னைப் படைத்த இறைவன் பாத்துகாப்பாக இருப்பான் என்ற நம்பிக்கையை இழந்தான். இதனால் திருடர்கள், எதிரிகள் ஆகியோருக்குப் பயந்து, ஜன்னல்களை மூடி காற்றோட்டமில்லாத அறைகளில் தூங்கி நோய்களுக்குள்ளான். தனது உடலில்தான் இறைவன் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறான் என்பதை அறியாமல் வெளியில் அவனைத் தேடினான். இறைவன் குடியிருக்கும் உடலைப் பேணிக்காக்க, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான். இவன் மறதி கொசுக்களின் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. கொசுவலையைக் கண்டுபிடித்து, அதற்குள் தூங்கி, சுத்தமான காற்றோட்டத்தைத் தடுத்ததல்லாமல், தான் வெளிவிடும் அசுத்தக் காற்றையே சுவாசித்து நோய்களை வரவழைத்துக் கொண்டான். கொசுவத்தியைப் பொருத்தி விஷப் புகையை சுவாசித்து, மேலும் உடலைப் பலவீனப் படுத்திக் கொண்டான்.
8, ப்கலில் தூங்கி, இரவுத்தூக்கத்தையும் கெடுத்து, மறுநாள் மனச்சோர்வும், உடல் சோர்வும் பெற்று, சோம்பேறியாகி, உடலுழைப்புக்குறைந்து, வறுமைக்குள் தள்ளப் பட்டான்.
9. உடலிலுள்ள துவாரங்களும், காலியிடங்களும் அடைபடாமல் பார்த்துக் கொள்ளவில்லை. இதனால், ஒவ்வாமை (allergy) யினால் ஏற்படும் நோய்களை வரவழைத்துக் கொண்டான்.
10. மேற்கூறியவாறு குகைக்கால ஆதிமனிதன் பெற்றிருந்த ஆற்றலில் பெரும்பகுதியை இழந்ததினால், அவன் வேட்டையாட மானைத் துரத்திச் சென்ற வேகத்தைவிட ஆயிரத்தில் ஒரு மடங்கு ஓடுகின்ற ஒலிம்பிக் வீரன் ஓட்டத்தில் சாதனையாளன் என்று பாராட்டப்படுகிறான். ஆற்றலின் பெரும்பகுதியை இழந்ததனால், பிறந்தவுடன் நடக்கும் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும்.
11. மேலும் சிறுபிராயத்திலேயே புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தவறான பாலியல் உறவுகள், விலை மாதுகளோடு தொடர்பு போன்ற பல்வேறு நெறி மீறல்கள், ஆண்களது பாலியல் ஆற்றலைக் குறைத்துவிடுகின்றன. பெண்கள் சிறுவயதிலிருந்து ஒழுக்க நெறியுடன் வளர்க்கப்படுகிறார்கள். பெண் நிறைகுடமென்றால், ஆணானவன் குறைகுடமாக இருக்கிறான். இந்த ஏற்றத்தாழ்வு குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கிறது. கூட்டாளிகள் இவர்களை ஒதுக்கிவிட்டு, வேறு கூட்டாளிகளைத் தேடுகிறார்கள். இதனால் மணவாழ்க்கை முறிந்து ஆண்களும் பெண்களும் துன்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
12. ஆண்களின் தவறான ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் அவர்களது மனதைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது பாலியல் உணர்வு நீரான விந்துவின் உற்பத்தியையும், வீரியத்தையும் பெருமளவில் குறைத்துவிடுகிறது. விந்துவின் உற்பத்தி ஒருவர் உண்ணும் உணவைப் பொருத்து அமையும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த உணவே கோளாறுகள் நிரம்பியது என்றால், விந்துவின் உற்பத்தி எப்படி பாதிக்காமல் இருக்கும்.
13. தாய்மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 9 விதிகளை அடிப்படையாகக் கொண்ட உணவு மற்றும் இயற்கை ஆற்றல்களின் விதிகள் ஆற்றலைப் பெருக்குகிறது; நோய்களைக் குணப்படுத்துகிறது; இதனால் பலவீனப்பட்ட உடல் சக்திமிக்க உடலாக மாறுகிறது. சக்திகிக்க உடல் சக்திமிக்க விந்துவின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
14. மருத்துவ மனப்பயிற்சி சிகிச்சையினால் (Treatment of Medicinal Meditation), போதைப் பழக்கத்திலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும், மனக் கவலைகளிலிருந்தும் மீட்கப்படுகிறார்கள். இதனால் அவர்களது நரம்பு மண்டலம் நலமடைந்து வீரிய நிலையை அடைகின்றது. ஆகவே தாம்பத்ய உறவின்போது சக்தி மிகுந்த விந்து விரைவில் உடலைவிட்டு வெளியேறாமல் நீண்ட நேரம் இருக்கச் செய்கிறது.
15. எனவே வாழும் தாய் மருத்துவ சிகிச்சையில் அடங்கியுள்ள 9 விதிகளையும் கடைப்பிடித்து மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது, ஆண்களும் பெண்களும் தாம்பத்ய உறவில் திருப்தியைப் பெறுகிறார்கள். இதன் மூலம் வாழ்க்கையின் முடிவான குறிக்கோளான மகிழ்ச்சியைப் பெருகிறார்கள்.
விபரங்களுக்கு கோவை விஜயா பதிப்பகத்தாரின் ”நோயும் மருந்தும் ஒரே இடத்தில்!” புத்தகத்தைப் படியுங்கள். போன்; 0422 2394614.
Medicinal Meditation Expert
ஆர்.எ.பரமன் (அரோமணி)
.R.A.Bharaman (Aromani)
செல்:9442035291
0 Post a Comment:
Post a Comment